பக்கங்கள்

திங்கள், 30 டிசம்பர், 2013

பறவையுன்னை தேடுகின்றேன்

வெள்ளைத் தாவனியுடன்
தினம் நீ வந்து 
என் உள்ளத் தாமரையை 
உரசிப் பார்ப்பதென்ன 
அந்த 
தாமரை தேடுதம்மா தான்
தேனைக் குடிக்கும் வண்டொன்றை 
இதை மறத்து தன்னந்தனியாக 
என் 
நந்த வனம் குயிலே 
போவ தெங்கே 
அதைக் கண்டதும் 
என் மனம் 
கூவுதிங்கே 
உன் 
இதழுக்கு இனி 
என்ன வேலை 
எனக்கு உதவிட 
வராதோ  நாளை 
என்னை
உன் மனம் நினைக்கலையா 
எந்தன் கவலை உனக்கில்லையா 
மானே உன்னை 
நான் போற்றுகிறேன் 
எனோ என்னை நீ வாட்டுகிறாய் 
வாடு கின்றேன்  பரவாயில்லை
தேடு கிறேன் பறவையுன்னை 
பறந்து வந்து பார் மாதே 
உனக்காக
சுர்ந்திருக்கும் தேன் கூடை  


இமைகள் வேலியா?

என்னைப் பார்த்த
கண்களை என்
உன் இமைகள் மூடியதோ
கண்களுக்கு
வேலியாக  நிற்கக்ச்
சொல்லி அந்த
இமைகளுக்கு நீ
கூலி போட்டுக் கொடுத்தாயோ
வெளி  போட்டு
தடுத்திட்டால்

ஆத்துத் தண்ணிர்
நின்றிடுமா
கண்கள்இரண்டை
மூடிக் கொண்டால்
உன் கட்டழகு
மறைந்திடுமா
தொட்டெழுத
வேனுமம்மா
உன்
இதழோரம்

சிந்திக் கிடக்கும்
 ஈரத்துளிகளை
தொட்டெழுத
வேனுமம்மா
உன்
இதழோரம்

சிந்திக கிடக்கும்
ஈரத்துளிகளை
தொட்டெழுத  வேனுமம்மா
உனக் கொரு கடிதம்
ஆடையால்
அலங்கரித்து
வாடையே இல்லாமல்
வரும் என் வஞ்சியே
உனக்கு ஜாடை கூட
செய்யத் தெரியாதா  

சனி, 28 டிசம்பர், 2013

உன் பூவிற்கு சொல்

வா என்
வான் மயிலே
தா எனக்கு
உன் சின்ன  இதழை
நீ கொடுக்க மறுத்தாலும்
உன்னை நான்
விடப்  போவதில்லை
என் தோல் தொட
வா முல்லை
உன் கன்னத்திலே
நான் வடு வைத்திடவா
நா வடு வைத்திடவா

நீ
வைத்திருக்கும்
பூக்கள் கூட என்
முகம் பார்க்க
மறுக்கிறதே
நீ வாய்திறந்து
சொல்லக் குடாதா
நானுனக்குக்
சொந்தகாரனென்று
நீ சொல்லியிருந்தால்
அந்தப் பூக்க்ளெல்லாம்
என்னைக் காண
துள்ளியிருக்கும்
நீ சொல்லாததால்
தானோ அவையெல்லால்
அங்கே சோர்ந்துக்
கிடக்கின்றது.  


நானா அந்த பேனா

கலைக்குயிலே  அதிஷ்ட்டசாலி  தான் 
அந்த பேனா
உன்   விரல்களின்
ஆணைப்பிலே  குரல் இன்றி 
அந்த  வெண் தாளுடன் 
கொஞ்சி  விளையாடும் 
 அந்த பேனா
அதிஷ்ட்டசாலி தான் 
வஞ்சியுன் கைப்பட்ட 
 அந்த பேனாவை 

கொஞ்ச  நேரம் 
என்னிடம் கொடு 
வெண் தாளுடன் அதை 
கொஞ்ச விடுவதற்கல்ல
 உன்
 விரல்களாரல் 
 அணைக்கப்பட்ட 
 அந்த 
  பேனாவையாவது 
 அணைக்கின்ற
  அதிஷ்ட்டத்தை 
 நான்  பெறத்தான்.