பக்கங்கள்

வியாழன், 2 ஜனவரி, 2014

எனக்கும் போட்டியா

 சின்ன
குயில் நீ
என்ன செய்வாய்
அன்னநடை
பயின்று வரும்
உன்  சின்ன
இடையை  நான்
அள்ளிக் கொண்டால்
சின்னக் குயிலே நீ
என்ன செய்வாய்
எந்தன் முன்னே

பெண்களின் எத்தனை பிம்பம்
இருந்தும் உன்னைத் தான்
நோக்குது என்
பார்வை அம்பும்
எனக்கு மட்டும் தான்
நீ சொந்தம்
ஆனால் போட்டிக்கு வருதே
இளம் அழகு
நீ  வலம் வரும்
நிலம் கூட என்னுடன்
போட்டிக்கு வருதே
உன் சொந்தம்
யாருக்கு
அதைச்
சொல்லிடம்மா
இந்த பாருக்கு

ஏன் என்னை ஏக்கினாய்

என் எதிரே
வந்த உதிரா முல்லையே
உன்னை
நான் தொட்டுப் பார்க்க
நேரம் வல்லையே
உன் நேரே
வந்தேன் நீ
ஓரம் சென்றாய்
தாரம் என்று
சொல்லி என்
மாரில் அணைக்க் வந்தேன்
நீ
தூரம் சென்றதாலே
நான் துயரம்
தான் கொண்டேன்

நீ என்னருகெ
வந்த போது தொட்டிட
தான் நினைத்தேன்
திட்டிடுவாயோ என
எண்ணி தொடாது
இருந்து விட்டேன்
கொட்டிட வந்த
மேகம் கொட்டாது
சென்றது போல்

உதட்டோரம்
புன்னகை சிந்தி
என் உள்ளத்தை
தொட்டு  விட்டு
உடலைத் டொடாது
போன தேனோ