பக்கங்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

என் கண்ணீரை கறைக்காதே

அம்மாடியோ 
ஆத்துப்பக்கம் 
நீ போனியோ 
அச்சடிக்கப்பட்டுள்ளதே 
ஆத்து மனலில் 
உன் பாதங்கள் 
தேடுகிறேன் 
கிடைக்கவில்லை உன் பாதங்கள்

வாடுகிறேன் 
நீ போன 
இடம் தெரியாது 
என் மனம் 
இருண்டு இரவானது 
என்னைத் தேடி 
நீ வந்தால் 
இரவான இந்த 
மனம் விடியும் 

நீ 
வரும் வரை 
இந்த ஆற்று நீரோடு 
என் கண்ணீரும் ஓடும் 
 இந்த
ஆறு  வற்றிப் போனாலும் 

என்  கண்ணீரை ஊற்றி 
போற்றுகின்றேன் 
என் கண்மணியே 
நீ 
வீ ற்றிருக்கும் இடத்தைக் 
கூறு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக