பக்கங்கள்

வியாழன், 26 ஜூன், 2014

உள்ளம் இறங்கி வா

நான்
தேடிய சீதை
நீ போகாதே
வேறு பாதை
நான் உன் நினைவாலே
உறக்கம் இழந்த பேதை
உன் மேல்
கொண்டேன் போதை
நான்
விதைக்கப் போகின்றேன் விதை

நீ
இடம் தருவாயோ
தனியாக வந்த
உனக்கு துணையாகத்தானே
வந்து நின்றேன்
நீ என்னை

ஏன் பார்க்க வல்லை
என் நாயகியே
நானல்லவா உன் பிள்ளை
நீ என்னை பார்க்காது
நேரம் ஆகிறது
என் விழியோரம்
நோகிறது
கன்னக்குழிக் கொண்ட
சின்னப் பூங்கொடியே

இன்னும் என்னை
ஏக்காதே  
உன் உள்ளம்
இரங்கினால்
என்
உள்ளம்
உறங்கிடுமே  

புதன், 18 ஜூன், 2014

தந்தி வராதா

பால்
நிலா உன்னை
நினைத்து  என் மனம்
பாலைவனமாகக்
கொதிக்குது
குளிர்கின்ற மேகங்களை
தொட்டுச் செல்கின்ற
நிலவே
என்னை உன்
நிழல் தொட்டாலும்
போதுமே

வானிலே நீந்தி
வரும் வெண் மீனே
இரு கை ஏந்தி வரும்
எனக்கு எப்போது
உன்னிடமிருந்து
தந்தி வரும்
என்னை வரச் சொல்லி
தந்தி
வந்து விட்டால்
பெளர்ணமி இரவில் 
பாதி மரம் ஏறிய
முத்தழகே
உன்னைச் சந்திக்க
முந்திக்  கொள்வேன்
மந்தி என
தாவி வந்து